Skip to main content

மூன்று வகையான விளம்பரப் பார்வையாளர்கள்

  • By Meta Blueprint
  • Published: Jul 14, 2022
  • Duration 5m
  • Difficulty Intermediate
  • Rating
    Average rating: 0 No reviews

இந்த பாடம் உங்கள் இலக்குப் பார்வையாளர்களை வரையறுக்கும் விதம் மற்றும் விளம்பர மேலாளரில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய மூன்று வகையான விளம்பர பார்வையாளர்களை அறிமுகப்படுத்தி உங்களை வழிநடத்துகிறது.

இந்தப் பாடம் உங்களை இவற்றுக்குத் தயார்படுத்துகிறது:

  • நீங்கள் விளம்பரப் பிரச்சாரங்களை கட்டமைக்கும்போது பார்வையாளர்களை வரையறுக்கவும்.
  • புதிய பார்வையாளர்கள், தனிப்பயன் பார்வையாளர்கள் மற்றும் நடப்பு பார்வையாளர்களைப் போன்றவர்கள் ஆகியோருக்கு இடையே உள்ள வேறுபாடுகளை அடையாளம் காணவும்.

உங்களது பார்வையாளர்களைத் தீர்மானியுங்கள்

Meta தொழில்நுட்பங்களுடன் விளம்பரம் செய்யும்போது, உங்கள் வணிகத்திற்கு மிகவும் முக்கியமான வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தலாம். நீங்கள் விளம்பரங்களைத் தொடங்குவதற்கு முன் விளம்பரங்களை இலக்காகக் கொள்ள பார்வையாளர்களை (உங்கள் வணிகம் வழங்குவதில் ஆர்வங்காட்டக்கூடிய பயனர்களின் குழு) வரையறுத்தல் என்பது உங்கள் விளம்பரங்களின் செயல்திறனை அதிகரித்து உங்களின் வணிக இலக்குகளை அடைய உங்களுக்கு உதவும்.


பார்வையாளர்களையும் அவர்கள் பார்க்கும் விளம்பரங்களையும் வரையறுப்பதற்கு உதவ, அவர்களின் தேவைகள், பண்புகள் மற்றும் உத்வேகங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் பார்வையாளர்களை வரையறுக்க உதவுவதற்கு நீங்கள் கேட்கக்கூடிய சில கேள்விகள் இங்கே உள்ளன:

1. ஒரு வழக்கமான வாடிக்கையாளருக்கான தேவை என்ன? 

ஒரு சேவை அல்லது தயாரிப்பு மூலம் உங்கள் வாடிக்கையாளர் பூர்த்தி செய்ய வேண்டிய வகையைப் பற்றி சிந்தியுங்கள்.


2. ஒரு வழக்கமான வாடிக்கையாளரின் பண்புகள் யாவை?

வயது, இருப்பிடம் மற்றும் வருமான வரம்பு போன்ற தொடர்புடைய பயனர் விவரங்களைப் பற்றி சிந்தியுங்கள்.


3. ஒரு வழக்கமான வாடிக்கையாளரின் உத்வேகங்கள் யாவை? 

விலை அல்லது தரம் போன்ற வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பங்களைக் குறுக்க உதவும் காரணிகளைப் பற்றிச் சிந்தியுங்கள்.


பெரும்பாலும் வணிகங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கொண்டிருக்கின்றன. Little Lemon இல் உள்ள சந்தைப்படுத்தல் குழு அவர்களின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பார்வையாளர்களை எவ்வாறு குறிப்பிடுகிறது என்பதைப் பார்ப்போம்.



நாம் முன்பே அறிந்துக்கொண்டது போல, Little Lemon, ஒரு நவீனப் பாங்குடன் கூடிய பாரம்பரிய மத்தியதரைக்கடல்சார் உணவு வகைகளை வழங்கும், பல கிளைகள் கொண்ட உள்ளூர் உணவகமாகும். சமீபத்தில் சந்தைப்படுத்துதல் நிபுணராக தஹ்ரிஷா குழுவில் சேர்ந்தார். உணவகத்தின் புதிய ஆன்லைன் டெலிவரி சேவையை அதன் சமூக ஊடக தளங்கள் முழுவதும் சந்தைப்படுத்துவதில் அவர் கவனம் செலுத்துவார்.*

தற்போதிருக்கும் வாடிக்கையாளர்களை நன்கு புரிந்துகொள்ள, இரண்டு விதமான பார்வையாளர்களாக, ஆரோக்கியமான குடும்பங்கள் மற்றும் பரபரப்பான தொழில்முறை வல்லுநர்கள் என்று பெயரிட்டு தஹ்ரிஷா அவர்களை வரையறுக்கிறார். ஆரோக்கியமான குடும்பங்கள் என்பன முதன்மைப் பார்வையாளர்கள் ஆவார்கள். மேலும் பரபரப்பான தொழில்முறை வல்லுநர்கள் முக்கியமான இரண்டாம் நிலைப் பார்வையாளர்கள் ஆவார்கள். தஹ்ரிஷா, Little Lemon வழங்கும் உணவுகளுடன் அவர்களை எவ்வாறு தொடர்புப்படுத்துவது என்பதை நன்கு புரிந்துகொள்ள ஒவ்வொரு பார்வையாளர்களின் தனிப்பட்ட தேவைகள், குணாதிசயங்கள் மற்றும் உத்வேகங்களை அடையாளம் காணுகிறார்.


*பொறுப்புத்துறப்பு: Little Lemon என்பது Meta கிரியேட்டிவ் ஷாப் வடிவமைத்த ஒரு கற்பனையான வணிகமாகும். நிஜ-வாழ்க்கை வணிகங்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்துடன் ஏதேனும் ஒற்றுமைகள் இருக்குமானால் அவை உள்நோக்கத்துடன் அமைக்கப்பட்டவை அல்ல.


கீழே Little Lemon இன் பார்வையாளர்களைப் பற்றி மேலும் அறிக. 

ஆரோக்கியமான குடும்பங்கள்

பரபரப்பான தொழில்முறை வல்லுநர்கள்.


ஒவ்வொரு பார்வையாளர்களும் குறிப்பிட்டு காட்டப்பட்ட நிலையில், Meta விளம்பர மேலாளரில் தனது பார்வையாளர்களை வரையறுக்கத் தேவையான தகவல்களை தஹ்ரிஷா பெற்றுள்ளார். 


விளம்பர மேலாளரில் உள்ள மூன்று வகையான பார்வையாளர்கள்


புதிய பார்வையாளர்கள்

புதிய பார்வையாளர்கள் என்பது விளம்பர மேலாளரில் உங்கள் விளம்பரத் தொகுப்பிற்கான உங்களால் தேர்ந்தெடுக்கப்படும் இயல்புநிலைத் தேர்வாகும்.


புதிய பார்வையாளர்களை உருவாக்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள பண்புகளைப் போன்று தேர்ந்தெடுக்கவும்: 


  • இருப்பிடம். வணிகத்திற்கான கவனத்தை ஈர்க்க விரும்பும் நகரங்கள், சமூகங்கள் மற்றும் நாடுகளில் விளம்பரம் செய்யவும்.

  • பயனர் விவரங்கள் வயது, பாலினம், கல்வி மற்றும் வேலை தலைப்பு போன்ற புள்ளிவிவரங்களின் அடிப்படையில் உங்கள் பார்வையாளர்களைத் தேர்வுசெய்யவும். 

  • ஆர்வங்கள். இயற்கை முறையில் விளைந்த பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட உணவை உண்பவர்கள் அல்லது அதிரடித் திரைப்படங்களை பார்க்கும் ஆர்வம் உள்ளவர்கள் என உங்கள் பார்வையாளர்களுக்கு இருக்கும் ஆர்வங்கள் மற்றும் பொழுதுபோக்குகளைச் சேர்த்து, உங்கள் இலக்கு விளம்பரங்களை மிகவும் தொடர்புடையதாக இருக்குமாறு மாற்றவும்.

  • நடத்தை. முந்தைய வாங்குதல்கள் மற்றும் சாதன பயன்பாடு போன்ற நுகர்வோர் நடத்தைகளின் அடிப்படையில் உங்கள் விளம்பரங்களை இலக்கிடவும்.

  • உங்கள் இணைப்புகள். Facebook பக்கம் அல்லது நிகழ்வில் இணைக்கப்பட்டிருந்த பயனர்களைச் சேர்க்கவும் அல்லது புதிய பார்வையாளர்களைக் கண்டுபிடிக்க அவர்களை விலக்கவும்.

எடுத்துக்காட்டாக, தஹ்ரிஷா ஆரோக்கியமான குடும்பங்களுக்கு விளம்பரங்களை இலக்கிடும் புதிய பார்வையாளர்களை உருவாக்க முடியும். பார்வையாளர்களை வரையறுத்தபோது, அவர்களின் தேவைகள் மற்றும் பண்புகள் போன்ற குறிப்பிட்ட விவரங்களை அவர் சேர்க்க முடியும்.

Little Lemonக்கான புதிய பார்வையாளர்களின் தேர்வை மதிப்பாய்வு செய்ய கீழே உள்ள படத்தை விரிவாக்கவும். 


தனிப்பயன் பார்வையாளர்கள்

தனிப்பயன் பார்வையாளர்கள், விசுவாசமான வாடிக்கையாளர்கள் அல்லது செயலியைப் பயன்படுத்தியவர்கள் அல்லது வலைதளத்தைப் பார்வையிட்டவர்கள் போன்ற வணிகத்தில் முன்பு ஆர்வங்காட்டிய பயனர்களுடன் தொடர்புகொள்ள உங்களை அனுமதிக்கிறது. உங்கள் சொந்த மூலங்களான தகவல்கள் அல்லது Meta தொழில்நுட்பங்களின் மூலங்களைக் கொண்டு தனிப்பயன் பார்வையாளர்களை உருவாக்கலாம்.

எந்தவொரு வாடிக்கையாளர் தகவல்களையும் நீங்கள் பதிவேற்றும் முன், வாடிக்கையாளர் பட்டியல் தனிப்பயன் பார்வையாளர்களுக்கான விதிமுறைகளை மதிப்பாய்வு செய்வதை உறுதிப்படுத்தவும்.

தனிப்பயன் பார்வையாளர்களை கட்டமைக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய பல்வேறு மூலங்களைப் பற்றி மேலும் அறிய கீழே உள்ள ஹாட்ஸ்பாட்களைப் பயன்படுத்தவும்.
மேலும் அறிய தலைப்புகளை விரிவாக்கவும். 

எடுத்துக்காட்டாக, தஹ்ரிஷா Little Lemon வலைதளப் பார்வையாளர்களின் தனிப்பயன் பார்வையாளர்களை உருவாக்கி அவர்களை விளம்பரங்களில் மீண்டும் செயலை மேற்கொள்ள வைக்கலாம். 


நடப்பு பார்வையாளர்களைப் போன்றவர்கள்

நடப்பு பார்வையாளர்களைப் போன்றவர்கள், உங்கள் தற்போதிருக்கும் வாடிக்கையாளர்களைப் போன்ற புதிய பயனர்களைச் சென்றடைய உங்களுக்கு உதவுகிறார்கள். நடப்பு பார்வையாளர்களைப் போன்றவர்கள், ஏற்கெனவே உள்ள பார்வையாளர்களுடன் ஒத்த பண்புகளைப் பகிர்ந்து கொள்ளும் குழுவாகும். நடப்பு பார்வையாளர்களைப் போன்றவர்கள் உங்கள் விளம்பரங்களுக்குப் பதிலளிக்கக்கூடிய பயனர்களுடன் தொடர்பு கொள்வதற்கான ஒரு சிறந்த வழியாகும். 

நீங்கள் நடப்பு பார்வையாளர்களைப் போன்றவர்களை உருவாக்கும் போது, உங்கள் ஆதார பார்வையாளர்களாக, நடப்பு பார்வையாளர்களைப் போன்றவர்களை அடிப்படையாகக் கொண்ட பார்வையாளர்கள் செயல்பட தனிப்பயன் பார்வையாளர்களை (முந்தைய பாடத்தில் குறிப்பிடப்பட்ட விருப்பங்களில் ஒன்றிலிருந்து உருவாக்கப்பட்டது) நீங்கள் தேர்வுசெய்ய வேண்டும். உங்களிடம் Meta பிக்சல் நிறுவப்பட்டிருந்தால், முதலில் தனிப்பயன் பார்வையாளர்களை உருவாக்காமல் நடப்பு பார்வையாளர்களைப் போன்றவர்களை உருவாக்கலாம். 


பயனர் விவர தகவல்கள் மற்றும் ஆர்வங்கள் போன்ற உங்கள் மூல பார்வையாளர்களின் பொதுவான பண்புகளை அடையாளம் காணவும், ஒரே மாதிரி பண்புகளைக் கொண்ட பயனர்களைக் கண்டுபிடிக்கவும் Meta தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம். வணிகம், தயாரிப்பு அல்லது சேவையில் ஆர்வமுள்ள பயனர்களைக் கண்டுபிடிக்க மூல பார்வையாளர்கள் உதவுகிறார்கள்.

எடுத்துக்காட்டாக, தஹ்ரிஷா Little Lemon வலைதள பார்வையாளர்களை நடப்பு பார்வையாளர்களைப் போன்றவர்களுக்கான ஆதாரமாகப் பயன்படுத்தலாம், இது Little Lemon இலிருந்து வழங்குபவைகளில் ஆர்வமுள்ளவர்களைக் கண்டுபிடிக்க உதவும்.


இந்த மூன்று பார்வையாளர்கள் விருப்பங்கள், வணிகங்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் ஆர்வங்காட்டக்கூடிய பயனர்கள் முன்பாக தங்கள் மெசேஜைப் பெறுவதற்கான சக்திவாய்ந்த கருவிகளாக இருக்கும். அடுத்த பாடத்தில், விளம்பர மேலாளரில் ஒவ்வொரு வகை பார்வையாளர்களை எவ்வாறு உருவாக்குவது என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

நினைவில்கொள்வதற்கான முக்கிய விஷயங்கள்

ஒரு விளம்பரத்தை உருவாக்கும் போது பார்வையாளர்களை வடிவமைக்க உதவும் உங்களது சிறந்த பார்வையாளர்களின் தேவைகள், பண்புகள் மற்றும் உத்வேகங்களை அடையாளங்காணவும்.




நீங்கள் இலக்கிட விரும்பும் பார்வையாளர்களின் பிரிவின் அடிப்படையில், விளம்பர நிர்வாகியில் புதிய பார்வையாளர்கள், தனிப்பயன் பார்வையாளர்கள் அல்லது நடப்பு பார்வையாளர்களைப் போன்றவர்களை உருவாக்கவும்.