Skip to main content

உங்கள் விளம்பரங்களின் வெற்றியை அளவிடுங்கள்

  • By Meta Blueprint
  • Published: Jul 14, 2022
  • Duration 5m
  • Difficulty Intermediate
  • Rating
    Average rating: 0 No reviews

இந்தப் பாடம், வெற்றி அளவுகோல்களை அடையாளங்காண்பதற்கும், தங்கள் விளம்பரங்களை உருவாக்கவும், காட்டவும், மதிப்பாய்வு செய்து, துல்லியமாக்குவதற்கும் உங்களை தயார்படுத்துகிறது.

இந்தப் பாடம் உங்களை இவற்றுக்குத் தயார்படுத்துகிறது:

  • உங்கள் விளம்பரக் குறிக்கோள்ளுடன் தொடர்புடைய வெற்றிக்கான அளவீடுகளைக் கண்டறிவதற்கு.

  • உங்கள் விளம்பர முடிவுகளை உருவாக்க, இயக்க, மதிப்பாய்வு செய்ய மற்றும் செம்மைப்படுத்துவதற்கு.

உங்கள் விளம்பரம் செயல்பட்ட விதம் பற்றி அறிக

விளம்பரத்தின் செயல்திறனை அளவிடுவதற்கும், நீங்கள் அமைத்த இலக்கை அது அடைந்துவிட்டதா என்பதைப் புரிந்துகொள்வதற்கும், Meta விளம்பர மேலாளரில் உங்கள் முடிவுகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும், அதைப் பற்றி பின்னர் மேலும் பேச உள்ளோம். அங்கு ஏற்கெனவே விளம்பரச் செயல்திறனில் அதிகத் தரவு இருக்கும்போது, உங்கள் இலக்குகளுடன் தொடர்புடைய அளவீடுகளை அடையாளம் காணுதல் உங்கள் வெற்றியை மதிப்பிடுவதற்கு உதவும். இதைச் செய்வதற்கு, நீங்கள் தேர்ந்தெடுத்த குறிக்கோளுடன் ஒத்துப்போகும் அளவீடுகளைப் பார்க்க வேண்டும். இந்த அட்டவணையில் அதைச் செய்யும் முறையைக் கூர்ந்து நோக்கலாம்.

உங்களுக்கு முக்கியமானவையாக இருக்கும் அளவீடுகளை அடையாளம் காணுதல்


உங்கள் வெற்றியை மதிப்பிடுவதற்கு உங்களுக்கு உதவும் அளவீடுகள் உங்கள் இலக்கு மற்றும் உங்கள் விளம்பரத்தை உருவாக்கும் போது நீங்கள் தேர்ந்தெடுத்த விளம்பரக் குறிக்கோளைப் பொறுத்ததாகும். ஒவ்வொரு குறிக்கோளும் உங்கள் முதன்மைச் செயல்திறன் அடையாளங்காட்டியாக இருக்க வேண்டிய இயல்புநிலை முடிவுகளின் அளவீட்டுடன் வருகிறது, ஆனால் உதவக்கூடிய மற்ற அளவீடுகளும் பார்ப்பதற்கு உள்ளன. மேலும் அறிய இந்த அட்டவணைகளை கூர்ந்து நோக்குங்கள்.

அறிதல்

உங்கள் வணிக இலக்கு இதற்கானதாக இருக்க வேண்டும்:

விளம்பரக் குறிக்கோள்

விளம்பர மேலாளரில் முடிவு அளவீடுகள்

வணிகம், பிராண்டு அல்லது சேவை பற்றிய அறிதலை அதிகரிக்கச் செய்தல்.

உங்கள் விளம்பரத்தை உங்கள் இலக்குப் பார்வையாளர்களில் உள்ளவர்களில் உங்களால் முடிந்தவரை அதிகப் பயனர்களுக்குக் காட்டுங்கள்.

அறிதல்

பார்வை (இயல்புநிலை அளவீடு)

  • உங்கள் விளம்பரங்களை குறைந்தது ஒருமுறையாவது பார்த்த பயனர்களின் எண்ணிக்கை.

கணக்கிடப்பட்ட விளம்பர நினைவு அதிகரிப்பு (பயனர்கள்)

  • உங்கள் விளம்பரத்தைப் பார்த்த பயனர்களிடம் இரண்டு நாட்களுக்குள் கேட்டால் எத்தனை பேருக்கு நினைவிருக்கும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்.

இம்ப்ரஷன்கள்  

  • உங்கள் விளம்பரங்கள் எத்தனை முறை காட்டப்பட்டன என்ற எண்ணிக்கை.


கவனத்தில் கொள்ளுதல் 

உங்கள் வணிக இலக்கு இதற்கானதாக இருக்க வேண்டும்:

விளம்பரக் குறிக்கோள்

விளம்பர மேலாளரில் முடிவு அளவீடுகள்

வலைதள முடிவு பக்கம், வலைப்பதிவு அல்லது செயலி போன்ற URL இலக்குக்கு நபர்களை அனுப்புதல்.

டிராஃபிக்

இணைப்பு கிளிக்குகள் (இயல்புநிலை அளவீடு)

  • விளம்பரத்தில் உள்ளே உள்ள இணைப்புகளின் கிளிக்குகளின் எண்ணிக்கை.

முடிவு பக்கப் பார்வைகள்

  • உங்கள் விளம்பரத்தைக் கிளிக் செய்த பிறகு உங்களது வலைதளம் அல்லது உடனடி அனுபவத்தை பயனர்கள் ஏற்றிய முறைகளின் எண்ணிக்கை.

Facebook பக்கம் அல்லது பதிவில் ஈடுபட விரும்பும் பல பயனர்களைச் சென்றடையவும். இந்தக் குறிக்கோளுடன், பதிவின் செயல்பாடுகள், பக்க விருப்பங்கள், நிகழ்வு சார்ந்த பதில்கள் அல்லது சலுகை க்ளைம்கள் ஆகியவற்றை ஊக்குவிக்கும் விளம்பரங்களை நீங்கள் உருவாக்கலாம்.

ஈடுபாடு

பதிவின் செயல்பாடுகள் (இயல்புநிலை அளவீடு)

  • உங்கள் விளம்பரங்களைச் சார்ந்து பயனர்கள் எடுக்கும் செயல்களின் மொத்த எண்ணிக்கை.

பக்க விருப்பங்கள்

  • உங்கள் விளம்பரங்கள் காரணமாக உங்கள் Facebook பக்கம் பெற்ற விருப்பங்களின் எண்ணிக்கை. 

நிகழ்வு சார்ந்த பதில்கள்

  • உங்கள் விளம்பரங்கள் காரணமாக, உங்கள் Facebook நிகழ்வில் ஆர்வமுள்ளது அல்லது கலந்துகொள்கிறேன் என பதிலளித்த பயனர்களின் எண்ணிக்கை.

உரையாடல்கள் தொடங்கின

  • உங்கள் விளம்பரங்கள் காரணமாக, (குறைந்தது ஏழு நாட்கள் செயலில் இல்லாத நிலைக்குப் பிறகு) உங்கள் வணிகத்திற்கு பயனர்கள் மெசேஜ் அனுப்பத் தொடங்கியதன் எண்ணிக்கை.

ஒரு வணிகத்திற்கான லீடுகளைச் சேகரிக்கவும். தயாரிப்பில் ஆர்வமுள்ளவர்களிடமிருந்து, அதாவது செய்திமடல்களுக்கான பதிவுகள் போன்ற தகவலைச் சேகரிக்கும் விளம்பரங்களை உருவாக்கவும். 

லீடுகள்

பார்வைகள் (இயல்புநிலை அளவீடு)

  • உங்கள் விளம்பரங்கள் காரணமாக பெற்ற லீடுகளின் எண்ணிக்கை. 

கன்வர்ஷன்

உங்கள் வணிக இலக்கு இதற்கானதாக இருக்க வேண்டும்:

விளம்பரக் குறிக்கோள்

விளம்பர மேலாளரில் முடிவு அளவீடுகள்

செயலியைப் பதிவிறக்க, App Storeக்கு நபர்களை அனுப்புதல்.

செயலி மூலம் விளம்பரப்படுத்துதல்

செயலி நிறுவல்கள் (இயல்புநிலை அளவீடு)

  • உங்கள் விளம்பரங்கள் காரணமாக உங்கள் செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டதன் எண்ணிக்கை. 



ஒரு வணிகத் தளத்தில் ஒரு குறிப்பிட்ட செயலை மேற்கொள்ள பயனர்களை ஊக்குவித்தல், 

அதாவது, பொருட்களை கார்ட்டில் சேர்த்தல் 

தளத்தில் பதிவு செய்தல் 

அல்லது வாங்குதல் போன்றவை.



விற்பனை

கன்வர்ஷன்கள் (இயல்புநிலை அளவீடு)

  • உங்கள் விளம்பரங்கள் காரணமாக வாங்குதல் அல்லது கார்ட்டில் சேர்க்கவும் போன்ற ஒரு குறிப்பிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் எண்ணிக்கை. 

குறிக்கோளுடன் தொடர்புடைய அளவீட்டைப் பொருத்தவும்

Little Lemon விளம்பரப் பிரச்சாரங்களுக்காக தஹ்ரிஷாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட, பின்வரும் விளம்பரக் குறிக்கோள்கள் ஒவ்வொன்றையும் தொடர்புடைய வெற்றி அளவீட்டுடன் பொருத்தவும்.

முடிந்தவரை அதிகப் பயனர்கள் Little Lemon விளம்பரத்தைப் பார்ப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக தஹ்ரிஷா அறிதல்  என்பதைத் தன் குறிக்கோளாக தேர்ந்தெடுத்துள்ளார். இந்தக் குறிக்கோளின் அடிப்படையில் அவர் எந்த வெற்றி அளவீட்டை ட்ராக் செய்ய வேண்டும்?

தஹ்ரிஷா, Little Lemon வலைதளத்திற்குப் பயனர்களை அனுப்புவதற்கு ட்ராஃபிக்  என்பதை அவருடைய குறிக்கோளாக தேர்ந்தெடுத்துள்ளார். இந்தக் குறிக்கோளின் அடிப்படையில் அவர் எந்த வெற்றி அளவீட்டை ட்ராக் செய்ய வேண்டும்?

தஹ்ரிஷா, Little Lemon மின்னஞ்சல் செய்திமடலுக்கான பதிவுகளை உருவாக்க லீடுகள்  என்பதைத் தனது குறிக்கோளாக தேர்ந்தெடுத்துள்ளார். இந்தக் குறிக்கோளின் அடிப்படையில் அவர் எந்த வெற்றி அளவீட்டை ட்ராக் செய்ய வேண்டும்?

தஹ்ரிஷா, Little Lemon வலைதளத்தில் ஆர்டர் செய்ய பயனர்களை தூண்டுவதற்காக விற்பனை என்பதை அவருடைய குறிக்கோளாக தேர்ந்தெடுத்துள்ளார். இந்தக் குறிக்கோளின் அடிப்படையில் அவர் எந்த வெற்றி அளவீட்டை ட்ராக் செய்ய வேண்டும்?

நான்கு படிநிலைகளில் உங்கள் விளம்பரக் குறிக்கோள்களைச் சோதித்து மீண்டும் செயற்படுத்தவும்.

உங்கள் செயல்திறனை அளவிட்ட பிறகு, எதிர்காலத்தில் உங்கள் விளம்பரங்களின் செயல்திறனை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்து நீங்கள் யோசனை செய்யக்கூடும். இதை நான்கு எளிய படிநிலைகளில் செய்யலாம்:


மேலும் அறிய ஹாட்ஸ்பாட்களைப் பயன்படுத்தவும். 

Little Lemonகான விளம்பரங்களை உருவாக்கும்போது, தஹ்ரிஷா இந்த மாதிரியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பார்ப்போம்.


மேலும் அறிய அம்புக்குறிகளைப் பயன்படுத்தவும்.

நீங்கள் தேர்ந்தெடுத்த குறிக்கோளின் அடிப்படையில் உங்கள் விளம்பரங்களின் வெற்றியை அளவிடும் விதம் பற்றி இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும், அடுத்த பாடத்தில் விளம்பர மேலாளரில் பார்வையாளர்களை உருவாக்கும் விதம் பற்றி மேலும் அறிந்துகொள்வோம்.

நினைவில்கொள்வதற்கான முக்கிய விஷயங்கள்

நீங்கள் தேர்ந்தெடுத்த குறிக்கோளுடன் ஒத்துப்போகும் அளவீடுகளுடன் விளம்பரத்தின் வெற்றியை அளவிடவும்.




உங்கள் செயல்திறனைத் தொடர்ந்து மேம்படுத்த உங்கள் விளம்பரத்தை உருவாக்குங்கள், காட்டுங்கள், மதிப்பாய்வு செய்யுங்கள் மற்றும் துல்லியமாக்குங்கள்.