Skip to main content

வாடிக்கையாளர் பயணம் முழுவதும் பயனர்களுக்கு உதவுதல்

  • By Meta Blueprint
  • Published: Jul 14, 2022
  • Duration 5m
  • Difficulty Intermediate
  • Rating
    Average rating: 0 No reviews

இந்தப் பாடம், Meta தொழில்நுட்பங்கள் முழுவதும், வாடிக்கையாளர் பயணத்தில் லீடுகளை ஆதரித்து வளர்ப்பதன் மூலம், பயனுள்ள லீட் உருவாக்கம் பிரச்சாரத்தை உருவாக்க கற்பவர்களை தயார்படுத்துகிறது.

இந்தப் பாடம் உங்களைப் பின்வருவனவற்றிற்குத் தயார்படுத்துகிறது:

லீட் உருவாக்கத் தீர்வுகளுடன் பயனுள்ள விளம்பரப் பிரச்சாரத்தை உருவாக்குதல் மற்றும் Meta தொழில்நுட்பங்களுடன் வாடிக்கையாளர் பயணத்தில் சாத்தியமான வாடிக்கையாளர்களுக்கு உதவுதல்.

வாடிக்கையாளர் பயணத்தை புரிந்துகொள்ளுதல்

இன்று மக்கள் பல்வேறு வழிகளில் கண்டுபிடிப்பிலிருந்து வாங்குவதற்கு நகர்கிறார்கள், மேலும் வழியில் வெவ்வேறு தேவைகளையும் சந்திக்கலாம். அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், Meta தொழில்நுட்பங்களில் ஷாப்பிங் செய்பவர் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் உங்கள் வணிகம் லீட் உருவாக்கத் தீர்வுகளைப் பயன்படுத்தலாம்.

மேலும் அறிய, ஹாட்ஸ்பாட்களைப் பயன்படுத்தவும்.

Dart: வாடிக்கையாளர் பயணம் முழுவதும் லீட்களை உருவாக்குதல்

ஷாப்பிங் செய்பவர் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வாடிக்கையாளர்களுடன் தொடர்பிலிருக்க லீட் உருவாக்கத் தீர்வுகளை ஈடுபடுத்திய கார் வாடகை நிறுவனத்தின் உதாரணத்தைப் பார்ப்போம்: கண்டறிதல், பரிசீலித்தல், வாங்குதல் மற்றும் லாயல்டி.


Dart, தெற்காசியாவில் வேகமாக வளர்ந்து வரும் வாகன வாடகை ஸ்டார்ட்அப் ஆகும். Dart, கொஞ்சம் இடங்களில் வாகனங்களின் எளிமைப்படுத்தப்பட்ட வரிசையை வழங்குகிறது.

Dart இல் உள்ள குழு, தெற்காசியாவில் ஹைபிரிட் மற்றும் மின்சார வாடகை கார்களுக்கான சந்தை நிலையை Meta தொழில்நுட்பங்களில் உருவாக்கப்படும் லீட்களின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் உருவாக்க விரும்பியது.

பொறுப்புத்துறப்பு: Dart என்பது Meta Creative Shop ஆல் வடிவமைக்கப்பட்ட ஒரு கற்பனையான வணிகமாகும். நிஜ வாழ்க்கை வணிகங்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்துடன் ஏதேனும் ஒற்றுமைகள் இருக்குமானால் அவை உள்நோக்கத்துடன் அமைக்கப்பட்டவை அல்ல.

கண்டறிதல்

சந்தைப்படுத்துதல் குழு ஆரம்பத்தில் லீட் விளம்பரங்களை உடனடிப் படிவத்துடன் பயன்படுத்தி பிராண்டில் ஆர்வத்தைத் தூண்டவும் அதிக எண்ணிக்கையிலான லீட்களை உருவாக்கவும் செய்தது. ஒவ்வொரு லீடும் தகுதி பெற்று, முன்பதிவுகளை மேற்கொள்ள, லீட்கள் பின்னர் அவர்களின் கால் சென்டருக்கு மாற்றப்பட்டன.

கருத்தில் கொள்ளுதல்

கூட்டாளர்களுடன் பணிபுரிவதால், Dart இல் உள்ள சந்தைப்படுத்துதல் குழு, தகுதிவாய்ந்த லீட்களுக்கான விளம்பரங்களை மேம்படுத்தி, கன்வர்ஷன்ஸ் APIஐ இணைத்து, அதை Meta விளம்பர மேலாளரில் உள்ள CRM தகவல்களுடன் இணைக்க முடிந்தது. முன்பதிவு செய்வதன் மூலம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதைத் தெரிவிக்க, சாத்தியமான வாடிக்கையாளர்களைப் பின்தொடர இது குழுவை அனுமதித்தது.

வாங்குதல்

விளம்பர மேலாளரின் இயந்திர வழிக் கற்றல், Dart இன் வாடிக்கையாளர் செயல்பாடு குறித்த மேம்படுத்தப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில், Dart தகுதிவாய்ந்த பார்வையாளர்களை முன்பதிவு செய்ய அணுகுவதற்கு உதவியது மற்றும் நிறுவனம் தனது வாடிக்கையாளர் சேர்ப்பு பட்ஜெட்டை மிகவும் செலவு குறைந்ததாக மாற்ற அனுமதித்தது.

லாயல்ட்டி

ஒரு வாடிக்கையாளர் முன்பதிவு செய்தவுடன், Dart இல் உள்ள குழுவானது மக்கள் தங்கள் செய்திமடலுக்குப் பதிவு செய்யும்படி ஊக்குவித்தது. Dart செய்திமடல் வாடிக்கையாளர் விசுவாசத்தைத் தக்கவைத்துக்கொள்ள ஒரு வழியை வழங்குகிறது, வாடிக்கையாளர்கள் சமீபத்திய சலுகைகள் மற்றும் புரோமோஷன்களைப் பற்றி உடனுக்குடன் தெரிந்துகொள்ள உதவுகிறது.

இறுதியில், Dart இல் உள்ள சந்தைப்படுத்துதல் குழு, வாடிக்கையாளர் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வாடிக்கையாளர்களை அடைய லீட் உருவாக்கத் தீர்வுகளைப் பயன்படுத்தி வெற்றிகரமான பிரச்சாரத்தை உருவாக்கவும், அவர்களின் லீட்களின் தரத்தை அதிகரிக்கவும் முடிந்தது.

பரிந்துரைகள் மற்றும் அடுத்த படிகள்

Meta தொழில்நுட்பங்கள் முழுவதும் லீட் உருவாக்கத் தீர்வுகளைப் பற்றி இப்போது நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள், உங்கள் லீட் உருவாக்க வியூகத்தை மேம்படுத்தத் தொடங்க பின்வரும் பரிந்துரைகளைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

மேலும் அறிய, தலைப்புகளை விரிவாக்கவும்.

அறிவுச் சோதனை

Pacific Moon ஒரு பல்கலைக்கழகமாகும். வாடிக்கையாளர் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் லீட்களை வளர்ப்பதற்கான வழிகளை அவர்களின் சந்தைப்படுத்தல் குழு ஆராய விரும்புகிறது. லீட் உருவாக்கத் தீர்வுகள் மற்றும் Meta தொழில்நுட்பங்கள் முழுவதும் உகந்ததாக்குதல்களைப் பயன்படுத்தி அவர்களின் பிரச்சாரத்தை எவ்வாறு அமைப்பது என்பதை நன்கு புரிந்துகொள்ள அவர்களின் குழுவிற்கு நீங்கள் உதவ வேண்டும்.


எந்த விளம்பர வடிவம் கருத்தில் கொள்வதை ஊக்குவிக்கும்?


3 சரியான பதில்களைத் தேர்வுசெய்யுங்கள்.


பொறுப்புத்துறப்பு: Pacific Moon என்பது Meta Creative Shop ஆல் வடிவமைக்கப்பட்ட ஒரு கற்பனையான வணிகமாகும். நிஜ வாழ்க்கை வணிகங்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்துடன் ஏதேனும் ஒற்றுமைகள் இருக்குமானால் அவை உள்நோக்கத்துடன் அமைக்கப்பட்டவை அல்ல.

நினைவில்கொள்வதற்கான முக்கிய விஷயங்கள்

Meta தொழில்நுட்பங்கள் முழுவதும் வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு கட்டத்திலும் ஷாப்பிங் செய்பவரின் பயணங்களில் ஈடுபட, லீட் உருவாக்கத் தீர்வுகளில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.




வாங்குதல் புனலின் ஒரு பகுதிக்கு மட்டுமே நீங்கள் லீட் உருவாக்கத்தைப் பயன்படுத்தினால், வாடிக்கையாளர் பயணத்தின் பிற பகுதிகளை ஆதரிக்க லீட் உருவாக்கத் தீர்வுகளைச் சோதித்துப் பார்க்கவும்.

மேலும் உதவி தேவைப்படுகிறதா? இந்த ஆதாரங்களை முயலவும்.